திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி — ஒல்லாது வானம் பெயல்.

Thirukkural Verse 559

திருக்குறள் 559 — கொடுங்கோன்மை (The Cruel Sceptre), பொருட்பால்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

கலைஞர் உரை

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது

மு. வரதராசன் உரை

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.

Muraikoti Mannavan Seyyin Uraikoti

Ollaadhu Vaanam Peyal

Couplet

Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain

Translation

The sky withdraws season's shower If the king misuses his power

Explanation

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers

Comments (1)

Shlok Bala
Shlok Bala
shlok bala verified

1 year ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

Panpilaan Petra Perunjelvam Nanpaal

Kalandheemai Yaaldhirin Thatru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.