திருக்குறள் 547: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை — முறைகாக்கும் முட்டாச் செயின்.
திருக்குறள் 547 — செங்கோன்மை (The Right Sceptre), பொருட்பால்.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
கலைஞர் உரை
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்
மு. வரதராசன் உரை
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு. இது தனக்குக் காவலாம் என்றது.
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin
Couplet
The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects
Translation
The king protects the entire earth And justice protects his royal worth
Explanation
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king
Comments (2)
Yashvi Devan
1 year ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip
Pollaadha Soozhak Ketum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Pranay Khatri
1 year ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.