திருக்குறள் 546: வேலன்று வென்றி தருவது மன்னவன் — கோலதூஉங் கோடா தெனின்.

Thirukkural Verse 546

திருக்குறள் 546 — செங்கோன்மை (The Right Sceptre), பொருட்பால்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

கலைஞர் உரை

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்

மு. வரதராசன் உரை

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

Velandru Vendri Tharuvadhu Mannavan

Koladhooung Kotaa Thenin

Couplet

Not lance gives kings the victory,But sceptre swayed with equity

Translation

Not the spear but the sceptre straight That brings success to monarch's might

Explanation

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice

Comments (2)

Aayush Bansal
Aayush Bansal
aayush bansal verified

1 year ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Zain Setty
Zain Setty
zain setty verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch

Chaandror Mukaththuk Kali

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.