விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். | குறள் எண் - 810

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
கலைஞர் உரை
"பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்"
மு. வரதராசன் உரை
"(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்"
சாலமன் பாப்பையா உரை
"பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.) . "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார், விரும்பாதாராலும் விரும்பப்படுவர். இது பகைவரும் விரும்புவாரென்றது. "
Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan Panpin Thalaippiriyaa Thaar
Couplet
Ill-wishers even wish them well, who guardFor ancient friends, their wonted kind regard
Translation
Even foes love for better ends Those who leave not long-standing friends
Explanation
Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends
Write Your Comment