திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 92
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இனியவை கூறல்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
மு. வரதராசன் உரை : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா உரை : முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
கலைஞர் உரை : முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Iniyavaikooral ( The Utterance of Pleasant Words )
Tanglish :
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
Couplet :
A pleasant word with beaming smile’s preferred,Even to gifts with liberal heart conferred
Translation :
Sweet words from smiling lips dispense More joys than heart’s beneficence
Explanation :
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind