திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1154
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – பிரிவு ஆற்றாமை
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
மு. வரதராசன் உரை : அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
சாலமன் பாப்பையா உரை : என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?
கலைஞர் உரை : பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Pirivaatraamai ( Separation unendurable )
Tanglish :
Aliththanjal Endravar Neeppin Theliththasol
Theriyaarkku Unto Thavaru
Couplet :
If he depart, who fondly said, ‘Fear not,’ what blame’s incurredBy those who trusted to his reassuring word
Translation :
He parts whose love told me -fear not Is my trust in him at default?
Explanation :
If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?