திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 428
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – அறிவுடைமை
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
மு. வரதராசன் உரை : அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை : பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
கலைஞர் உரை : அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Arivutaimai ( The Possession of Knowledge )
Tanglish :
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil
Couplet :
Folly meets fearful ills with fearless heart;To fear where cause of fear exists is wisdom’s part
Translation :
Fear the frightful and act wisely Not to fear the frightful’s folly
Explanation :
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared