Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar Punkaneer Poosal Tharum | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் | Kural No - 71 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். | குறள் எண் – 71

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 71
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – இல்லறவியல்
  • அதிகாரம் – அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

மு. வரதராசன் உரை : அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

சாலமன் பாப்பையா உரை : அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

கலைஞர் உரை : உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Illaraviyal ( Domestic Virtue )
  • Adikaram : Anputaimai ( The Possession of Love )

Tanglish :

Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar

Punkaneer Poosal Tharum

Couplet :

And is there bar that can even love restrain?The tiny tear shall make the lover’s secret plain

Translation :

What bolt can bar true love in fact The tricking tears reveal the heart

Explanation :

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme