திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 333
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – நிலையாமை
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
மு. வரதராசன் உரை : செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
கலைஞர் உரை : நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Nilaiyaamai ( Instability )
Tanglish :
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal
Couplet :
Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ
Translation :
Wealth wanes away; but when it comes Take care to do enduring things
Explanation :
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable