திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 847
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – புல்லறிவாண்மை
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
மு. வரதராசன் உரை : அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
சாலமன் பாப்பையா உரை : அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
கலைஞர் உரை : நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Pullarivaanmai ( Ignorance )
Tanglish :
Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku
Couplet :
From out his soul who lets the mystic teachings die,Entails upon himself abiding misery
Translation :
The fool that slights sacred counsels Upon himself great harm entails
Explanation :
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself