திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 241
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
மு. வரதராசன் உரை : பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
சாலமன் பாப்பையா உரை : செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
கலைஞர் உரை : கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Arulutaimai ( Compassion )
Tanglish :
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula
Couplet :
Wealth ‘mid wealth is wealth ‘kindliness’;Wealth of goods the vilest too possess
Translation :
The wealth of wealth is wealth of grace Earthly wealth e’en the basest has
Explanation :
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men