திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 169
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – அழுக்காறாமை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
மு. வரதராசன் உரை : பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
சாலமன் பாப்பையா உரை : பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க
கலைஞர் உரை : பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Azhukkaaraamai ( Not Envying )
Tanglish :
Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan
Ketum Ninaikkap Patum
Couplet :
To men of envious heart, when comes increase of joy,Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ
Translation :
Why is envy rich, goodmen poor People with surprise think over
Explanation :
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered