திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1228
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – பொழுதுகண்டு இரங்கல்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
மு. வரதராசன் உரை : ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
சாலமன் பாப்பையா உரை : முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
கலைஞர் உரை : காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pozhudhukantirangal ( Lamentations at Eventide )
Tanglish :
Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan
Kuzhalpolum Kollum Patai
Couplet :
The shepherd’s pipe is like a murderous weapon, to my ear,For it proclaims the hour of ev’ning’s fiery anguish near
Translation :
A deadly arm, this shepherd’s flute Hails flaming eve and slays my heart
Explanation :
The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)