திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 164
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – அழுக்காறாமை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
மு. வரதராசன் உரை : பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
சாலமன் பாப்பையா உரை : பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்
கலைஞர் உரை : தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Azhukkaaraamai ( Not Envying )
Tanglish :
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu
Couplet :
The wise through envy break not virtue’s laws,Knowing ill-deeds of foul disgrace the cause
Translation :
The wise through envy don’t others wrong Knowing that woes from evils throng
Explanation :
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds