திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 170
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – அழுக்காறாமை
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
மு. வரதராசன் உரை : பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை : பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
கலைஞர் உரை : பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Azhukkaaraamai ( Not Envying )
Tanglish :
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar
Perukkaththil Theerndhaarum Il
Couplet :
No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain
Translation :
The envious prosper never The envyless prosper ever
Explanation :
Never have the envious become great; never have those who are free from envy been without greatness