திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1003
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – நன்றியில் செல்வம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
மு. வரதராசன் உரை : சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை : மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.
கலைஞர் உரை : புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Nandriyilselvam ( Wealth without Benefaction )
Tanglish :
Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai
Couplet :
Who lust to heap up wealth, but glory hold not dear,It burthens earth when on the stage of being they appear
Translation :
A burden he is to earth indeed Who hoards without a worthy deed
Explanation :
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame