Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum Viliyaadhu Nirkum Pazhi | எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் | Kural No - 145 | Thirukkural Meaning & Definition in Tamil and English

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. | குறள் எண் – 145

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 145
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – இல்லறவியல்
  • அதிகாரம் – பிறனில் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

மு. வரதராசன் உரை : இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

சாலமன் பாப்பையா உரை : அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

கலைஞர் உரை : எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Illaraviyal ( Domestic Virtue )
  • Adikaram : Piranil Vizhaiyaamai ( Not coveting another”s Wife )

Tanglish :

Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum

Viliyaadhu Nirkum Pazhi

Couplet :

‘Mere triflel’ saying thus, invades the home, so he ensuresA gain of guilt that deathless aye endures

Translation :

Who trifles with another’s wife His guilty stain will last for life

Explanation :

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *