திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 125
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – அடக்கம் உடைமை
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
மு. வரதராசன் உரை : பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை : செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
கலைஞர் உரை : பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Atakkamutaimai ( The Possession of Self-restraint )
Tanglish :
Ellaarkkum Nandraam Panidhal Avarullum
Selvarkke Selvam Thakaiththu
Couplet :
To all humility is goodly grace; but chief to themWith fortune blessed, -’tis fortune’s diadem
Translation :
Humility is good for all To the rich it adds a wealth special
Explanation :
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches