திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1208
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – நினைந்தவர் புலம்பல்
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
மு. வரதராசன் உரை : காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
சாலமன் பாப்பையா உரை : அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!
கலைஞர் உரை : எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Ninaindhavarpulampal ( Sad Memories )
Tanglish :
Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu
Couplet :
My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow
Translation :
I bring him to ceaseless memory He chides not; and thus honours me
Explanation :
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved