திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 110
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
மு. வரதராசன் உரை : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Seynnandri Aridhal ( Gratitude )
Tanglish :
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku
Couplet :
Who every good have killed, may yet destruction flee;Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free
Translation :
The virtue-killer may be saved Not benefit-killer who is damned
Explanation :
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit