திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 355
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – மெய்யுணர்தல்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மு. வரதராசன் உரை : எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.
சாலமன் பாப்பையா உரை : எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.
கலைஞர் உரை : வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Meyyunardhal ( Truth-Conciousness )
Tanglish :
Epporul Eththanmaith Thaayinum Apporul
Meypporul Kaanpadhu Arivu
Couplet :
Whatever thing, of whatsoever kind it be,’Tis wisdom’s part in each the very thing to see
Translation :
Knowledge is truth of things to find In every case of every kind
Explanation :
(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing