திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 423
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – அறிவுடைமை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
மு. வரதராசன் உரை : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
கலைஞர் உரை : எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Arivutaimai ( The Possession of Knowledge )
Tanglish :
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu
Couplet :
Though things diverse from divers sages’ lips we learn,’Tis wisdom’s part in each the true thing to discern
Translation :
To grasp the Truth from everywhere From everyone is wisdom fair
Explanation :
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom