திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1038
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – உழவு
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
மு. வரதராசன் உரை : ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை : உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.
கலைஞர் உரை : உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Uzhavu ( Farming )
Tanglish :
Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu
Couplet :
To cast manure is better than to plough;Weed well; to guard is more than watering now
Translation :
Better manure than plough; then weed; Than irrigating, better guard
Explanation :
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)