திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 853
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – இகல்
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
மு. வரதராசன் உரை : ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை : மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
கலைஞர் உரை : மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Ikal ( Hostility )
Tanglish :
Ikalennum Evvanoi Neekkin Thavalillaath
Thaavil Vilakkam Tharum
Couplet :
If enmity, that grievous plague, you shun,Endless undying praises shall be won
Translation :
Shun the plague of enmity And win everlasting glory
Explanation :
To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame