திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 87
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – விருந்தோம்பல்
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
மு. வரதராசன் உரை : விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்
சாலமன் பாப்பையா உரை : விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
கலைஞர் உரை : விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Virundhompal ( Hospitality )
Tanglish :
Inaiththunaith Thenpadhon Rillai Virundhin
Thunaiththunai Velvip Payan
Couplet :
To reckon up the fruit of kindly deeds were all in vain;Their worth is as the worth of guests you entertain
Translation :
Worth of the guest of quality Is worth of hospitality
Explanation :
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure