திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 153
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பொறையுடைமை
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
மு. வரதராசன் உரை : வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை : வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது
கலைஞர் உரை : வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Poraiyutaimai ( The Possession of Patience, Forbearance )
Tanglish :
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai
Couplet :
The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart
Translation :
Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength
Explanation :
To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might