திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1158
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – பிரிவு ஆற்றாமை
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
மு. வரதராசன் உரை : இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
சாலமன் பாப்பையா உரை : உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
கலைஞர் உரை : நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Pirivaatraamai ( Separation unendurable )
Tanglish :
Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum
Innaadhu Iniyaarp Pirivu
Couplet :
‘Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;’Tis sadder still to bid a friend beloved farewell
Translation :
Bitter is life in friendless place; Worse is parting love’s embrace!
Explanation :
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover