திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 91
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இனியவை கூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
மு. வரதராசன் உரை : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா உரை : அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
கலைஞர் உரை : ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Iniyavaikooral ( The Utterance of Pleasant Words )
Tanglish :
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol
Couplet :
Pleasant words are words with all pervading love that burn;Words from his guileless mouth who can the very truth discern
Translation :
The words of Seers are lovely sweet Merciful and free from deceit
Explanation :
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous