திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1044
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – நல்குரவு
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
மு. வரதராசன் உரை : வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
கலைஞர் உரை : இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Nalkuravu ( Poverty )
Tanglish :
Irpirandhaar Kanneyum Inmai Ilivandha
Sorpirakkum Sorvu Tharum
Couplet :
From penury will spring, ‘mid even those of noble race,Oblivion that gives birth to words that bring disgrace
Translation :
Want makes even good familymen Utter words that are low and mean
Explanation :
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words