திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 218
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – ஒப்புரவறிதல்
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
மு. வரதராசன் உரை : ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை : செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
கலைஞர் உரை : தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Oppuravaridhal ( Duty to Society )
Tanglish :
Itanil Paruvaththum Oppuravirku Olkaar
Katanari Kaatchi Yavar
Couplet :
E’en when resources fall, they weary not of ‘kindness due,’-They to whom Duty’s self appears in vision true
Translation :
Though seers may fall on evil days Their sense of duty never strays
Explanation :
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth