திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 360
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – மெய்யுணர்தல்
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
மு. வரதராசன் உரை : விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
சாலமன் பாப்பையா உரை : விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
கலைஞர் உரை : விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Meyyunardhal ( Truth-Conciousness )
Tanglish :
Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi
Couplet :
When lust and wrath and error’s triple tyranny is o’er,Their very names for aye extinct, then pain shall be no more
Translation :
Woes expire when lust, wrath, folly Expire even to name, fully
Explanation :
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)