திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1084
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – தகை அணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
மு. வரதராசன் உரை : பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
சாலமன் பாப்பையா உரை : பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
கலைஞர் உரை : பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Thakaiyananguruththal ( The Pre-marital love )
Tanglish :
Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip
Pedhaikku Amarththana Kan
Couplet :
In sweet simplicity, A woman’s gracious form hath she;But yet those eyes, that drink my life, Are with the form at strife
Translation :
This artless dame has darting eyes That drink the life of men who gaze
Explanation :
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity