திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1070
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – இரவச்சம்
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
மு. வரதராசன் உரை : இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை : இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?
கலைஞர் உரை : இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை’ என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Iravachcham ( The Dread of Mendicancy )
Tanglish :
Karappavarkku Yaangolikkum Kollo Irappavar
Sollaatap Poom Uyir
Couplet :
E’en as he asks, the shamefaced asker dies;Where shall his spirit hide who help denies
Translation :
The word “No” kills the begger’s life Where can the niggard’s life be safe?
Explanation :
Saying “No” to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter’s life hide itself ?