திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1293
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – நெஞ்சொடு புலத்தல்
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
மு. வரதராசன் உரை : நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?
சாலமன் பாப்பையா உரை : நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?
கலைஞர் உரை : நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Nenjotupulaththal ( Expostulation with Oneself )
Tanglish :
Kettaarkku Nattaaril Enpadho Nenjenee
Pettaangu Avarpin Selal
Couplet :
‘The ruined have no friends, ‘they say; and so, my heart,To follow him, at thy desire, from me thou dost depart
Translation :
You follow him at will Is it “The fallen have no friends” my heart?
Explanation :
O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?