திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 115
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – நடுவு நிலைமை
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
மு. வரதராசன் உரை : கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை : தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
கலைஞர் உரை : ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Natuvu Nilaimai ( Impartiality )
Tanglish :
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani
Couplet :
The gain and loss in life are not mere accident;Just mind inflexible is sages’ ornament
Translation :
Loss and gain by cause arise; Equal mind adorns the wise
Explanation :
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)