திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 799
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – நட்பாராய்தல்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
மு. வரதராசன் உரை : கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை : கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.
கலைஞர் உரை : ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Natpaaraaidhal ( Investigation in forming Friendships )
Tanglish :
Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum
Couplet :
Of friends deserting us on ruin’s brink,’Tis torture e’en in life’s last hour to think
Translation :
Friends who betray at ruin’s brink Burn our mind ev’n at death to think
Explanation :
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death