திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 116
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – நடுவு நிலைமை
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
மு. வரதராசன் உரை : தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
கலைஞர் உரை : நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Natuvu Nilaimai ( Impartiality )
Tanglish :
Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin
Couplet :
If, right deserting, heart to evil turn,Let man impending ruin’s sign discern
Translation :
Of perdition let him be sure Who leaves justice to sinful lure
Explanation :
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”