திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 9
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – கடவுள் வாழ்த்து
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மு. வரதராசன் உரை : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
சாலமன் பாப்பையா உரை : எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
கலைஞர் உரை : உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Katavul Vaazhththu ( The Praise of God )
Tanglish :
Kolil Poriyin Kunamilave Enkunaththaan
Thaalai Vanangaath Thalai
Couplet :
Before His foot, ‘the Eight-fold Excellence,’ with unbent head,Who stands, like palsied sense, is to all living functions dead
Translation :
Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine
Explanation :
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation