திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 60
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
மு. வரதராசன் உரை : மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை : ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
கலைஞர் உரை : குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Vaazhkkaith Thunainalam ( The Worth of a Wife )
Tanglish :
Mangalam Enpa Manaimaatchi Matru
Adhan Nankalam Nanmakkat Peru
Couplet :
The house’s ‘blessing’, men pronounce the house-wife excellent;The gain of blessed children is its goodly ornament
Translation :
An honest wife is home’s delight And children good are jewels abright
Explanation :
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness