திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 204
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – தீவினையச்சம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
மு. வரதராசன் உரை : பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
சாலமன் பாப்பையா உரை : மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
கலைஞர் உரை : மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Theevinaiyachcham ( Dread of Evil Deeds )
Tanglish :
Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu
Couplet :
Though good thy soul forget, plot not thy neighbour’s fall,Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall
Translation :
His ruin virtue plots who plans The ruin of another man’s
Explanation :
Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates