திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 824
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – கூடா நட்பு
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
மு. வரதராசன் உரை : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
கலைஞர் உரை : சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Kootaanatpu ( Unreal Friendship )
Tanglish :
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa
Vanjarai Anjap Patum
Couplet :
‘Tis fitting you should dread dissemblers’ guile,Whose hearts are bitter while their faces smile
Translation :
Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles
Explanation :
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart