திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1111
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
மு. வரதராசன் உரை : அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
சாலமன் பாப்பையா உரை : அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!
கலைஞர் உரை : அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Nalampunaindhuraiththal ( The Praise of her Beauty )
Tanglish :
Nanneerai Vaazhi Anichchame Ninninum
Menneeral Yaamveezh Paval
Couplet :
O flower of the sensitive plant! than theeMore tender’s the maiden beloved by me
Translation :
Soft blessed anicha flower, hail On whom I dote is softer still
Explanation :
May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you