திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 826
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – கூடா நட்பு
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
மு. வரதராசன் உரை : நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
சாலமன் பாப்பையா உரை : நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் உரை : பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Kootaanatpu ( Unreal Friendship )
Tanglish :
Nattaarpol Nallavai Sollinum Ottaarsol
Ollai Unarap Patum
Couplet :
Though many goodly words they speak in friendly tone,The words of foes will speedily be known
Translation :
The words of foes is quickly seen Though they speak like friends in fine
Explanation :
Though (one’s) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)