திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 97
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இனியவை கூறல்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
மு. வரதராசன் உரை : பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா உரை : பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
கலைஞர் உரை : நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Iniyavaikooral ( The Utterance of Pleasant Words )
Tanglish :
Nayan Eendru Nandri Payakkum
Payaneendru Panpin Thalaippiriyaach Chol
Couplet :
The words of sterling sense, to rule of right that strict adhere,To virtuous action prompting, blessings yield in every sphere
Translation :
The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds
Explanation :
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)