திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 193
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பயனில சொல்லாமை
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
மு. வரதராசன் உரை : ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை : பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
கலைஞர் உரை : பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Payanila Sollaamai ( Against Vain Speaking )
Tanglish :
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai
Couplet :
Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains
Translation :
The babbler’s hasty lips proclaim That “good-for-nothing” is his name
Explanation :
That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”