திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1104
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
மு. வரதராசன் உரை : நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
சாலமன் பாப்பையா உரை : தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?
கலைஞர் உரை : நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Punarchchimakizhdhal ( Rejoicing in the Embrace )
Tanglish :
Neengin Theru�um Kurukungaal Thannennum
Theeyaantup Petraal Ival?
Couplet :
Withdraw, it burns; approach, it soothes the pain;Whence did the maid this wondrous fire obtain
Translation :
Away it burns and cools anear Wherefrom did she get this fire?
Explanation :
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?