திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 234
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – புகழ்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
மு. வரதராசன் உரை : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..
சாலமன் பாப்பையா உரை : தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
கலைஞர் உரை : இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Pukazh ( Renown )
Tanglish :
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku
Couplet :
If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned
Translation :
From hailing gods heavens will cease To hail the men of lasting praise
Explanation :
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world