திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 763
- பால் – பொருட்பால்
- இயல் – படையில்
- அதிகாரம் – படை மாட்சி
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
மு. வரதராசன் உரை : எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
சாலமன் பாப்பையா உரை : பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
கலைஞர் உரை : எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Padaiyil ( The Excellence of an Army )
- Adikaram : Pataimaatchi ( The Excellence of an Army )
Tanglish :
Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai
Naakam Uyirppak Ketum
Couplet :
Though, like the sea, the angry mice send forth their battle cry;What then? The dragon breathes upon them, and they die
Translation :
Sea-like ratfoes roar What if? They perish at a cobra’s whiff
Explanation :
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra