திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 33
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
மு. வரதராசன் உரை : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
கலைஞர் உரை : செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Aran Valiyuruththal ( Assertion of the Strength of Virtue )
Tanglish :
Ollum Vakaiyaan Aravinai Ovaadhe
Sellumvaai Ellaanj Cheyal
Couplet :
To finish virtue’s work with ceaseless effort strive,What way thou may’st, where’er thou see’st the work may thrive
Translation :
Perform good deeds as much you can Always and everywhere, o man!
Explanation :
As much as possible, in every way, incessantly practise virtue