திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1312
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – புலவி நுணுக்கம்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
மு. வரதராசன் உரை : காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
சாலமன் பாப்பையா உரை : நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)
கலைஞர் உரை : ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pulavi Nunukkam ( Feigned Anger )
Tanglish :
Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai
Neetuvaazh Kenpaak Karindhu
Couplet :
One day we silent sulked; he sneezed: The reason well I knew;He thought that I, to speak well pleased, Would say, ‘Long life to you!’
Translation :
He sneezed while we went on sulking Expecting me to say “live long”
Explanation :
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life